I'm always "Squabble with Rife"

Friday, May 9, 2014

குழந்தைகளின் வாந்தி

பிறந்த குழந்தை தாயின் மார்பிலிருந்து தாய்ப்பாலை உறிஞ்சிப் பருகும் போது சிறிதளவு வெளிக்காற்றும் சில சமயங்களில் பாலுடன் உறிஞ்சப்படுவதால் காற்று இரைப்பையில் புகுந்துவிடுகிறது. அரவை இயந்திரம் போல் இரைப்பை அசைவதால் உறிஞ்சப்பட்ட காற்றுவாய் வழியாக வெளியேறுகிறது. அவ்வாறு வரும் தருணத்தில் தாய்ப்பாலையும் காற்று கொண்டு வருகிறது. சிறிய அளவில் பால் வெளியே வந்தால் 'குழந்தை பாலைக் கக்குகிறதே' என்கிறோம், அதே போல் அதிக அளவில் வெளியே வந்தால் 'குழந்தை வாந்தி எடுக்கிறதே' என்று வேதனையுறுகிறோம். ஃபீடிங் பாட்டிலிலும் இதே போன்ற நிலைமை ஏற்படலாம். அடிக்கடி குழந்தைக்கு இதுபோல் நேரிட்டால் தாய்ப்பால் வேண்டிய அளவு உடலில் சேராததால், குழந்தை ஒரு வித மயக்கத்திலேயே உறங்கிக் கிடக்கும், சோர்வினால் குழந்தை கண் திறந்து பார்க்காமலேயே இருக்கும், உடலும் இளைத்துவிடும், இதற்கு சுலபமான சிகித்ஸை என்னவென்றால் தாய்ப்பாலைக் கொடுத்தவுடன் தாயார் தோளின் மேல் சாத்தி பிடித்துக்கொண்டு குழந்தையின் முதுகில் 4-5 தடவைகள் கையால் தட்டவேண்டும். குழந்தை ஏப்பம் விடும், அந்த ஏப்பத்தின் மூலம் வாயு வெளிப்பட்டு விடும். பாலைக் கக்காது. பீடிங் பாட்டிலில் பாலைக் கொடுப்பதானால் நிப்பில் வழியே சில துளி பாலை வெளியாக்குவதால் பாட்டிலினுள்ளே இருக்கும் காற்று வெளியேறிவிடும். அதன் பிறகு நிப்பிலை குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். பால் குடித்தவுடன் குழந்தை நீந்தும் பருவத்தில் குப்புறப்படுக்கவிடாமல் மல்லாந்த நிலையிலேயே படுக்க வைக்க வேண்டும். குப்புறப்படுத்தால் வயிறு பூமியில் அழுத்தப்படுவதால் உடனே பால் வாந்தியாகலாம், குப்புறப்படுக்க குழந்தை அழுதால் சிறிது நேரம் தோளில் சாத்தி தட்டிக்கொடுக்க வேண்டும்.
இரண்டு வயது முதல் ஐந்து வயதுவரை சில குழந்தைகள் ரயில் அல்லது பஸ் மற்றும் வேறு வாகன பிரயாணங்களிலும் வண்டியின் ஆட்டத்தினால் வாந்தி செய்துவிடுகின்றன. கெட்டியான உணவு சாப்பிட்டதால் வாந்தி செய்கிறதா? என்றெண்ணி தாயார் திரவ உணவு தந்தாலும் வாந்தி செய்யும்.இரைப்பையை சுற்றியுள்ள நரம்புகளின் தூண்டுதலினால் இதுபோல பிரயாண வாந்தி ஏற்படுகிறது, குழந்தை பயணம் செய்யும் சூழ்நிலையில் நெல்பொறி + சுக்கு + தனியா + திப்பிலி ஆகியவை சிறிய அளவில் நெல்பொறி சற்று தூக்கலாக கஞ்சிபோல் காய்ச்சி இளஞ்சூடாக பருகச் செய்வதன் மூலம் பிரயாண வாந்தியை தடுக்கலாம், மட்டுமல்ல. இந்தக் கஞ்சி விரைவில் ஜீர்ணமாவதுடன் பசியையும் குழந்தைக்கு தூண்டிவிடும்.
இரைப்பை நாம் உண்ணும் உணவை நிறுத்தி அமிலங்களை அதன்மேல் சுருந்து தன்னுடைய அசைவினால் உணவை அரைத்து சிறுகுடலுக்கு அனுப்புகிறது. இரைப்பையில் உணவு நன்கு அரைபடும் வரை அதன் இறுதிப் பகுதியில் இறுக்கமாக மூடிக் கொண்டிருக்கும் கிரஹணி எனும் Spincte, திறக்கும் போதுதான் இரைப்பையிலிருந்து அரைபட்ட உணவு சிறுகுடலுக்குச் செல்லமுடியும். குழந்தைகள் பலருக்கு இந்த கிரஹணி வலுவிழந்து போனால் உண்ட உணவு ஜெரிக்காமல் அப்படியே மலத்துடன் வெளியேறும். இந்த கிரஹணீ எனும் பகுதி சுருங்கிப்போனால் உணவு கீழ் நோக்கி செல்லமுடியாமல் சாப்பிட்ட 15-30 நிமிடங்களுக்குப் பிறகு பூராவும் வாந்தியாகிவிடும், வாந்தி பீச்சாங்குழலிருந்து வேகமாய் பீச்சடிப்பது போல் எட்டி விசிறியடித்துக்கொண்டு வரும், மலம் சிறுநீர் கட்டுப்படும், இப்படி எது சாப்பிட்டாலும் வாந்தியாவதால் குழந்தை ஷீணித்து இளைத்துவிடும், இவ்வகை வாந்தி மிக அபூர்வம்தான். குடல் அடைப்பை ஆபரேஷன் மூலம் சரிசெய்துவிடலாம். Chips, காரவகை பேல்பூரி. மசால்பூரி. சென்னாபட்டூரா, சமோசா, வெஜிடபிள் puf போன்ற உணவுகளையும் tomota soup, Vegetable Soup, Pepsi, Coco cola போன்ற வகையறாக்களையும், ice creams, கசாட்டா போன்றவைகளையும் இன்று தாய்தந்தையர் குழந்தைகள் அழுது அடம் பிடித்து கேட்கும்போது மனமிளகி அடிக்கடி வாங்கித் தருகின்றனர். இவ்வகை உணவின் கெடுதிகளால் குழந்தையின் குடல் கெட்டு அஜீர்ணத்தினால் உண்டாகும் வாந்தி மிகவும் கடுமையானது. இவ்வகை வாந்தியை சரி செய்வதற்கு முதலில் சிறிதளவாவது உபவாசம் அவசியம். குழந்தையால் பூர்ண உபவாசம் முடியாதென்பதால் அஜீர்ணம் ஏற்படுத்தும் உணவுகளை எக்காரணம் கொண்டும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சிறிய உபவாசத்திற்குப் பிறகு முன் குறிப்பிட்ட நெல்பொறிக் கஞ்சியை சிறிதுசூடாக காலை இரவு வேளைகளில் கொடுக்க வேண்டும். Refrigerator- ஐ பூட்டி வைக்க வேண்டும் நாம் அறியாமல் குழந்தைகள் Cool Drinks ஏதேனும் எடுத்துக் குடித்தால் நம் முயற்சிகளனைத்தும் பாழாகிவிடும், மதியம் மிளகு ஜீரகம் பொடித்துச் சேர்த்த ரஸம் சூடாக சாதத்தில் சிறிது நெய்யும் கலந்து சுட்ட அப்பளத்துடன் நார்த்தங்கா வத்தலும் குழந்தைக்குப் பழக்கப்படுத்த சிறிது நாட்களிலேயே நல்ல குணம் தெரியும், நம் முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த உணவுகள் மேல் நாட்டினர் அறிந்தால் உடனே அதை ஹோடட்ல் மற்றும் வீடுகளில் பின்பற்ற ஆரம்பித்து விடுவர்!அதைவிடுத்து மேல்நாட்டினர் உணவை நாம் குழந்தைகளுக்குக் கொடுத்து நோயை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment