I'm always "Squabble with Rife"

Saturday, August 30, 2014

மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்....

* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.

* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

* பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

Thursday, August 28, 2014

இளைப்பு குறைய

கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும். பிறகு நுண்ணிய துகளாக சலித்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு வெல்லத்தை பொடித்து இரண்டையும் கலந்து சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வந்தால் இளைப்பு குறையும்.
குறிப்பு: இந்த மருந்தை சாப்பிடும் போது பழைய சோறு, வெள்ளரிக்காய், கத்தரிக்காய், மோர், நாரத்தம் பழம், தயிர், பச்சை வாழைப்பழம், அத்திப்பழம், ஜவ்வரிசி, பீர்க்கங்காய், இளநீர், மீன், எலுமிச்சம் பழம், கீரைத்தண்டு,அவரைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பு குறையும்.

பிரமியபூண்டு

 பிரமியபூண்டு சுவையில் துவர்ப்பு, கசப்பு மற்றும் இனிப்பு சுவை உடையது. குளிர்ச்சியான வீரியம் உடையது. மலத்தை இளக்கிப் போக்கும், புத்திசக்தியை வளர்க்கும், வலிநிவாரணி, பசியை தூண்டிவிட்டு செரிக்காத வயிற்றிலிருக்கும் உணவை செரிக்கவைக்கும். மேலும், மூட்டுவீக்கத்தைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும், இருதயதுர்பலத்தைப் போக்கும், மூச்சுக்குழாயை விரிவுபடுத்தும், சிறுநீரை தாராளமாக  வெளியேற்றும்.
கபவாதநோய்களை போக்கக்கூடியது. காக்காய் வலிப்பு, புத்திபேதலித்தநிலை, மறதிநோய் போன்றவற்றை குணப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண், மண்ணீரல் வீக்கம், மஹோதரம், வாயுத்தொல்லை, மூச்சிரைப்பு, தோல் உபாதைகள், குஷ்டம், வெண்குஷ்டம், ஜனன உறுப்பு நோய்கள், யானைக்கால் வியாதி, மாதவிடாய் கோளாறுகள், காய்ச்சல் மற்றும் உடல் அசதி ஆகியவற்றை நீக்கக்கூடியது. 
ஆயுர்வேதத்தில் பிரம்மியை மூலப்பொருளாகக் கொண்டு பிரம்மி தைலம், பிரம்மி க்ருதம் போன்ற அறிவை வளர்க்கக்கூடிய சிறந்த மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

Friday, August 22, 2014

மூலிகைக் கஞ்சி

ஒரு பலம் (60 கிராம்) மூலிகைச் சரக்கை சூர்ணம் செய்து, எட்டு பங்கு ஜலத்தில் கஷாயம் போல் (120 IL) காய்ச்சி எடுக்கவும். இதற்கு 'ப்ரமத்யா' எனப்பெயர். இதை இளஞ்சூடாக பருக வேண்டும்.
முஸ்தாதி ப்ரமத்யா - கோரைக் கிழங்கும் வெட்பாலரிசியும் சேர்த்து ப்ரமத்யா என்கிற கஞ்சி பக்குவம் செய்யவும், இதை ஆற வைத்து, தேன் சேர்த்து இரண்டு பலம் (120 IL) அளவில் உட்கொள்ள இரத்தபேதி நீங்கும்.
யவாகூ முறை - நாலு பலம் (240 கிராம்) உணவு அல்லது ஒளஷதச் சரக்கை அறுபத்தினாலு பலம் ஜலத்தில் சேர்த்து, அரைவாசி கறையுமளவு காய்ச்சியெடுக்கப்படும் குழம்பான திரவம் 'யவாகூ' எனப்படும். ஆம்ரத்வகாதி யவாகூ - மாம்பட்டை, மரிமாஞ்செடிப்பட்டை, நாவற்பட்டை இவற்றை கஷாயமிட்டு, அதில் சம்பா அரிசியை உடைத்துச் சேர்த்து யவாகூவாகப் பக்குவம் செய்து உட்கொள்ள கிரஹணீரோகம் (Sprue) தீரும்.
யூஷம் செய்யும் முறை - ஒரு கஷாயத்தில் பிரதான வஸ்து ஒரு பலமும், சுக்கு, திப்பிலி இவை அரைக்கால் பலமும், ஒரு பிரஸ்த்தம் (1லிட்டர்) ஜலத்தில் சேர்த்து காய்ச்சியெடுக்கப்படும் கஞ்சீ 'யூஷம்' எனப்படும்.
ஸப்தமுஷ்டிக யூஷம் - கொள், யவதானியம், இலந்தம் பழம், பயறு, முள்ளங்கி, கிரந்தி தகரம், சுக்கு, தனியா இவற்றாலான யூஷத்தையுபயோகிக்க கபம், வாதங்களின் கோளாறுகள், ஸந்நிபாதஜ்வரம் (வாத பித்த கப சீற்றத்தினால் உண்டாகும் காய்ச்சல்) மூட்டு வலி, வீக்கம் இவை தீரும். தொண்டை, வாய், மார்பு இவற்றிலுள்ள மலங்களை வெளிப்படுத்தி அவற்றிற்கும் சுத்தியைத் தரும். இக்கஷாயத்திற்கு 'ஸப்த முஷ்டிகயூஷம்' என்று பெயர்.
பேயா - ஒரு பலம் (60 கிராம்) பதார்த்தத்தைப்பொடித்து, அறுபத்திநாலு பாலம் ஜலத்தில் பக்குவம் செய்து, அரைவாசி குறையும்படி காய்ச்சியெடுத்து, உணவு முதுலியதுடன் உட்கொள்ளலாம். இதை "பேயா" எனக்கூறுவர்.
உசீராதி பேயா - வெட்டிவேர், பர்ப்பாடகம், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, சுக்கு, சந்தனம் இவற்றால் பேயாவைப் பக்குவம் செய்து, குளிர்ந்த பிறகு, உடற்சூடும் ஜ்வரமும் நிவ்ருத்தியாவதற்கு உபயோகிக்கலாம்.உஷ்ணோதகம் - ஜலத்தை எட்டில் ஒரு பங்காவது, நாலில் ஒரு பங்காவது, அரைவாசியாவது, கொதிவரும் வரையிலுமாவது காய்ச்சியெடுக்க அது 'உஷ்ணோதகம்' எனப்படும். உஷ்ண ஜலத்தை இரவில் பருகிவர கபத்தினால் ஏற்படும் நோயகள், மூட்டுவீக்கம் மற்றும் வலி, உடல் பருமன்நோய், இருமல்,
மூச்சுத் திணறல், ஜ்வரம் இவை நீங்கும், மூத்திரப்பையிலுள்ள நோய்களையும் இது போக்கும். பசியை நன்கு தூண்டி விடும் சக்தியும் இதற்குண்டு.
ஷீரபாக விதி - மூலிகை சரக்குக்கு எட்டு மடங்குபாலும், பாலுக்கு, நான்கு மடங்கு ஜலமும் சேர்த்து, சேர்க்கப்பட்ட பால் மாத்திரம் மிகுந்திருக்குமாறு காய்ச்சி எடுக்கவும், மூலிகைகள் சேர்க்காமல் வெறும் பாலை மாத்திரம் மேற்கூறிய படி ஜலம் சேர்த்துக் காய்ச்சி அன்னம் முதலியதற்கு பதிலாக அஜீர்ண வயிற்று வலியில் உட்கொள்ளலாம்.
பஞ்சமூலி க்ஷீரம் - சிறுவழுதுணை, சிறுகாஞ்சொறி, பூனைக்காலி, சிற்றாமுட்டி, கண்டங்கத்திரி, வெல்லம், சுக்கு இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த பால் கபஜ்வரம், மலபந்தம், நீர்ச்சுருக்கு இவற்றை நீக்கும். அன்னம் பக்குவம் செய்யும் வகை நோய்களுக்கு தகுந்தவாறு உணவுகளைப் பக்குவம் செய்யும் வகைகளை அறிவோம்.
யவாகூ அல்லது க்ருஸரா - அரிசி, பயறு, உளுந்து, எள் இவற்றில் எதையாவது எடுத்துப்பொடித்து, அதற்கு ஆறு பங்கு ஜலம், சேர்த்து குழம்பாகக் காய்ச்ச வேண்டும், இதற்கு 'யவாகூ' அல்லது க்ருஸரர் எனப்பெயர். ரோகிகளுக்கு இது அனுகூலமானது. மலத்தைக்கட்டும் பலம் வாய்ந்தது. போஷாக்கை அளிப்பது.
விலேபீ - முன்போலவே அரிசி முதலியதையுபயோகித்து, அவற்றிற்கு நாலு பங்கு ஜலம் சேர்த்து யவாகூவை விட இன்னும் கனமாகப் பக்குவம் செய்ய, அவ்வுணவு 'விலேபீ' எனப்படும், இதற்கு போஷாக்கு, ஹ்ருதயத்திற்கு நலம் தரும் சக்தியுண்டு. இனிப்பாகயிருப்பதால் பித்தத்தை குறைத்து விடும்.
பேயாவும் யூஷவும் - அதிக தண்ணீரும் சொற்ப அரிசியுடையதும் என பேயாவென்கிற மற்றோருவித கஞ்சியுண்டு. முற்கூறிய அரிசி முதலிய பதார்த்தங்களில் ஒன்றை பதினாலு பங்கு ஜலம் சேர்த்து பக்குவம் செய்ய வேண்டும். யூஷமென்னும் கஞ்சி போயவைப் பார்க்கினும் சிறிது கனமாயிருக்கும். பேயா யூஷத்தினும் கணத்தில் லேசானது. மலக்கட்டையும், தாது புஷ்டியைத் தரும் சக்தியும் அதற்குண்டு, யூஷமும் எளிதில் ஜீர்ணமாகும், லேசானது. பலம் தரும், தொண்டைக்கு நல்லது கபத்தை போக்கும். மண்டம் - நாலு பலம் அரிசியைப் பதினாலு மடங்கு ஜலத்தில் பக்குவம் செய்து, அதிலிருந்து அவிழைத் தவிர்த்து கஞ்சியை மாத்திரம் வடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பக்குவம் செய்து வடித்தெடுத்த கஞ்சி வெகு சீக்கிரத்தில் ஜீர்ணமாகும். இனிப்பாகயிருக்கும். இதற்கு 'மண்டம்' எனப் பெயர். இந்த மண்டத்தில் சுக்கும், இந்துப்பும் சேர்த்து உபயோகித்தால் சிறந்த பசையைத்தூண்டி விடும் சக்தியும், ஜீர்ணமாகாமல் கிடப்பதை ஜெரிக்கவும் செய்து விடும்.
அஷ்ட குண மண்டம் - தனியா, சுக்கு, திப்பலி, மிளகு, இந்துப்பு, இவற்றையும் மோரையும் மேற்கூறிய மண்டத்தில சேர்த்து, பெருங்காயமும் எண்ணெயும் பொரித்துச் சேர்த்து பக்குவம் செய்தால் அதற்கு 'அஷ்ட குண மண்டம்' என்று பெயர். இது பசியைத் தூண்டும். மூத்திரப்பையிலுள்ள தோஷங்களையும், மூத்திரம் சிக்கிக்கொள்வதையும் போக்கக்கூடியது. ரத்தத்தை அதிகரிக்கும், ஆயாஸத்தைத்தீர்க்கும், ஜூரம் போக்கும். மூன்று தோஷங்களாகிய வாத பித்த கபங்களை சமநிலைக்கு கொண்டு வரும் தன்மையுடையது.
வாட்ய மண்டம் - யவதான்யத்தை நன்றாக கழுவியுலர்த்தி, நன்கு வறுத்து, முன்போலவே பக்குவம் செய்ய அதற்கு 'வாட்ய மண்டம்' எனப்பெயர். அதற்கு கப பித்தத்தை குறைத்து விடும் சக்தியுண்டு, தொண்டைக்கு இதமானது. ரத்த பித்தங்களை சுத்தம் செய்துவிடும்.
லாஜமண்டபம் - நெற்பொறிகளாலாவது, வறுத்த அரிசியிலாவது முன்போல் பக்குவம் செய்தால் அதற்கு லாஜமண்டம் என்றுபெயர். கப, பித்தத்தைக் குறைக்கும். மலக்கட்டு உண்ட உடல் எரிச்சல், ஜ்வரம் போக்கும்.

Friday, August 15, 2014

கீரையின் மருத்துவ குணங்கள்

வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்டது.

அரைக்கீரை:உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும்.

பசலைக்கீரை:உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும்.

முருங்கைக்கீரை: உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம். ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்யும். மாத விலக்கு வரும் போது ஏற்படும் வலியை குறைக்கும்.

சிறுகீரை: மலச்சிக்கலை குறைக்கும். உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். உடல் தளர்ச்சியை போக்கும்.

மணத்தக்காளி கீரை
வயிற்று புண், குடல் புண்ணை குணப்படுத்தும்.

அகத்திக்கீரை:
 உடல் வெப்பத்தை குறைக்கும். குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம் தலை சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

முகம் பற்றிய சில குறிப்புகள்

வறண்ட சருமம் பெற: பாதாம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பாலாடை, எழுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து பசை போலச் செய்ய வேண்டும். அந்த பசையை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்னர் தண்ணீரால் கழுவி வந்தால் வறண்ட சருமம் பெறும். முகம் பளபளப்பாக: சம அளவு கேரட் சாறு, ஆரஞ்ச் பழச்சாறு, எழுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும். முகம் மென்மையாக மாற: சிறிதளது பாசி பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊற வைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும். முகத்தில் கரும்புள்ளிகள் குறைய: கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும். முகப்பரு குறைய: ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு நன்றாக அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.