I'm always "Squabble with Rife"

Sunday, May 18, 2014

உளுந்து மருந்து

உளுந்து தமிழர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஓர் எளிய பொருள். இதனை நாம் அன்றாடம் நம்மையும் அறியாமல் தினசரி யன்படுத்துகின்றோம். ஆனால் இதற்கு அனேக நற்குணங்கள் உள்ளன அவற்றில் சில வாதத்தை போக்கும் உளுந்து, உளுந்து வாய்வை அதிகரிக்கும், பித்தத்தை தணிக்கும். உடல் வலிமையை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். உளுந்துடன் கொத்தமல்லி, முடக்கத்தான் சேர்த்து துவையலாக செய்து சாப்பிட மூட்டுகள் ஆரோக்கியமாகும். வாதம் குறையும். உளுந்து, தேங்காய், பூண்டு போன்றவற்றில் துவையல் செய்து சாப்பிட தாது விருத்தியாகும்.
உளுந்து பித்தத்தை குறைப்பதுடன் மயக்கம், வாந்தி போன்றவற்றை கட்டுப்படுத்தும். புற்றுநோய் வராமலும் தடுக்கும். உளுந்து பெண்களுக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக பருவமடைந்த பெண்கள் உளுந்தம் கஞ்சி செய்து சாப்பிட இடுப்பு எலும்புகள் வலுவடையும். இது உடலுக்கு ஏற்றது என்றாலும் அளவிற்கு அதிகமாக உண்ணும் பொழுது வயிற்றுப் போக்கை உண்டாக்கலாம். இதனை இரவில் தவிர்ப்பது நல்லது. வயதானவர்களும் இதனை தவிர்ப்பது நல்லது.
உளுந்து மாஷா என சமஸ்கிருதத்திலும், ஆயுர்வேதத்திலும் அழைக்கப்படுகின்றது. உளுந்தில் செய்யப்படும் தைலம் மஹாமாஷா தைலம் என அழைக்கப்படுகின்றது. இது வீக்கத்தை குறைத்து வாதத்தை போக்கக் வல்லது.

No comments:

Post a Comment