I'm always "Squabble with Rife"

Wednesday, February 12, 2014

உணவே மருந்து

மூலிகை டீ என்பது, தேயிலையால் தயாரிக்கப்படும் தேநீரிலிருந்து மாறுபட்டது. மருத்துவ குணமுள்ள மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுவது. நன்மை மிகுந்த இந்த மூலிகை பானங்களை, நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். துளசி, புதினா, இஞ்சி, மல்லிகை போன்றவற்றை உபயோகித்து, ‘மூலிகை டீ' செய்யலாம். 

மூலிகை டீ தயாரிக்க பொது விதிகள்
  • தண்ணீர் புதிதாக இருக்க வேண்டும். அலுமினிய பாத்திரங்களை உபயோகிக்க வேண்டாம்.
  • தேவைக்கு அதிகமாக மூலிகைகளை உபயோகிக்க வேண்டாம்.
  • தேர்ந்தெடுக்கும் மூலிகைகள், இயற்கை உரங்களால் பயிராக்கப்பட்டு இருந்தால் நல்லது.
  • மூலிகை இலைகளை கையாலோ, கத்தியாலோ சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும்.
  • ஒன்று அல்லது இரண்டு கரண்டி தேயிலை மூலிகையை ஒரு கப்பில் போட்டு புதிதாக காய்ச்சின சூடான தண்ணீரை ஊற்றவும்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து நிதானமாக அருந்தவும்.
  • கீழ்கண்ட மூலிகைகள் - மூலிகை டீ தயாரிக்க பயன்படும்
  • ஏலக்காய் - வாய்வு, வயிற்று தொல்லைகளுக்கு நல்லது. வாந்தி, ஜலதோஷம் இவற்றுக்கு உகந்தது. 
  • லவங்கப்பட்டை - ரத்தஓட்டம், ஜீரணம், தொற்று நோய்கள் இவற்றுக்கு மருந்து. கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கக்கூடாது.
  • சோம்பு - ஜீரண சக்திக்கு நல்லது. தாய்ப்பால் பெருக உதவும். குழந்தைகளின் வயிற்று வலியை போக்கும்.
  • மல்லிகை - மல்லிகை பூக்களுடன், தேயிலை (பச்சை தேயிலை) கலந்து செய்யும் இந்த பானம்  Anti - Oxidant ஜீரணத்திற்கு நல்லது. கொலஸ்ட்ராலை குறைக்கும்.
  • பூண்டு - சிறு துண்டுகளாக வெட்டி உபயோகிக்கவும். தொற்று வியாதிகளை தடுக்கும்.
  • புதினா - புத்துணர்ச்சி தருவது, வயிற்று வலியை போக்கும்.

No comments:

Post a Comment