I'm always "Squabble with Rife"

Monday, March 17, 2014

வெல்லம்

கரும்பு வெல்லம்

கரும்பில் இருந்து பெறப்படும் வெல்லம் இந்திய துணைக்கண்டம் முழுதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான இனிப்புப் பண்டங்கள் கரும்பு வெல்லத்தில் இருந்து செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் பாயாசத்தில்சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் திருமண விழாக்களில் மணமக்கள் எதிரெதிரில் நின்று ஒருவர் தலை மீது மற்றொருவர் வெல்லத்தை வைத்து வணங்குகின்றனர்.

பனை வெல்லம்

வட இந்தியாவில் பனை வெல்லத்தை குர் என அழைக்கின்றனர். பெரும்பாலான பனை வெல்லம் பேரீச்சம் பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் 'சாகோ' எனப்படும் பனையில் இருந்தும் தென்னையில் இருந்தும் பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பனை வெல்லத்தை இலங்கை மற்றும் சில தென்கிழக்காசிய நாடுகளில் பாகு போன்ற பதத்திலும் பயன்படுத்துகின்றனர். இதனை 'பனைத் தேன்' என அழைக்கின்றனர்.

சத்துக்கள்

100 கிராம் வெல்லத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:
சக்தி383 கலோரிகள்
ஈரப்பதம்3.9 கிராம்
புரதம்0.4 கிராம்
கொழுப்பு0.1 கிராம்
தாதுக்கள்0.6 கிராம்
மாவுச்சத்து (carbohydrates)95 கிராம்
சுண்ணம் (calcium)80 மில்லி கிராம்
எரியம் (phosphorus)40 மில்லி கிராம்
இரும்பு2.64 மில்லி கிராம்

No comments:

Post a Comment