Tuesday, April 8, 2014
சந்தன மருத்துவம்
கோடை வெப்பத்தின் கொடுமையில் நமக்கு உதவும் உற்ற நண்பன் சந்தனம். தணியாத நாவறட்சி வாட்டுகிறதா? எவ்வளவு நீர் குடித்தாலும் தாகம் தணியவில்லையா? இளநீருடன் தூய்மையான சந்தனத்தூளை போட்டு ஊறவைத்து பிறகு வடிகட்டி அருந்தினால் தாகம் நாவறட்சி அடங்கிவிடும். கோடையில் ஏற்படும் வேர்க்குருவிற்கு அரைத்த சந்தனத்தை இழைத்துப் பூசி வந்தால் வேர்க்குரு பட்டுப்போகும். ஜூரத்தால் ஏற்படும் தலைவலி, புருவத்தில் வலி இவற்றிற்கு சந்தனத்தை தேனில் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் விரைவில் குணமடையும். அரைத்த சந்தனத்தில் கொஞ்சம் தண்ணீர் கலந்து 10 நிமிடம் தெளியவைத்து தெளிந்த ஒரு டம்ளர் நீரில் தேன், சர்க்கரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், சீதக்கழிச்சல், வெப்பம் ஆகியவை தணியும். எலுமிச்சம்பழச்சாறு விட்டு சந்தனத்தை அரைத்து சாற்றைப் பூசினால் நமைச்சல், சொறி, சிரங்கு, அக்கி, தேமல் போன்ற சரும நோய்கள் விலகும். முகப்பருக்கல் வேறோடு மறைய சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகப்பருவின் மீது தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு மறைந்து முகம் பொலிவு பெறும். சந்தனத்தில் மூன்று வகை உண்டு. சிவப்பு நிறச் சந்தனம் மருத்துவத்திற்குச் சிறந்தது, மஞ்சள் நிற சந்தனம் சுமாரான பலன் கிடைக்கும். வெண்மை நிற சந்தனம் பயனற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment