என்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா?
தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ. துளசி இலை 50 கிராம். வேப்பங்கொழுந்து 5 கிராம். இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.
வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment