Thursday, April 10, 2014
ஒரு தலம் இரு சிவசக்திகள்
மதுரை-சங்கரன்கோயில் சாலையில் மதுரையிலிருந்து 155 கி.மீ. தொலைவில் உள்ளது கடையநல்லூர். காமவயப்பட்ட இந்திரன் அகல்யையின் கற்பை அழித்ததால் உடல் முழுவதும் கண்ணாக இருக்க சாபம் பெற்றான். பிறகு அர்ஜுனபுரி என்ற புராணப் பெயர் பெற்ற இத்தலத்தை அடைந்து ஈசான பாகமான வடகிழக்கில் குளம் ஒன்றை வெட்டி நீராடினான். நீலமணிநாதர், அருணாசலேஸ்வரர் எனும் இரு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தான். நீலமணிநாதரின் வடபுறத்தில் வடக்கு வாசல்செல்வி மற்றும் சதி அம்சத்தோடு நீலகண்டேஸ்வரி என்று இரு அம்பாள்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். எதிரெதிர் சந்நதிகளில் இரு அம்மன்கள் உள்ளனர். செல்வியம்மன் அசுர சக்தியை அழித்து பக்தர்களைக் காக்கும் வகையில் வலக்கையில் திரிசூலம் ஏந்தியும் இடக்கரத்தில் விபூதி கொப்பரையுடனும் அருள்பாலிக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment