இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண்
போராளி யார் என்று கேட்டால் ஜான்சி ராணி என்பீர்கள். ஆம் வட ஹிந்திய பாடத்திட்டமும், ஜீ-தமிழ் தொலைகாட்சியும் நமக்கு அப்படி தான் சொல்லி கொடுத்துள்ளன. ஆனால் வீர தமிழச்சி வேலுநாச்சியார் பற்றி பேசுவதில்லை.
ஜான்சி ராணி காலத்துக்கு முன்னரே (கி.பி 1772)
தனது ராஜ்யத்தை இழந்து மீண்டும் அடைந்த
போராடி வென்ற தமிழச்சி வீர மங்கை வேலு நாச்சியார் ஆவார். அவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகள். ஜான்சி ராணி (கி .பி 1835-1858 )காலத்திற்கு முன்னரே வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி வேலு நாச்சியார் 25-12-1796 - இல் வீர மரணமடைந்தார்.
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வெற்றியும்
பெற்ற முதல் பெண்மணி.
உலகில் வேறு எந்த ராணியும் வேலுநாச்சியார்
வீரத்திற்கும் அரசியல் விவேகத்திற்கும்
இணை இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர்.சிறு வயதிலேயே போர்க் கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.
போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர்.ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருந்தவர்.1790ல் தனது மகள் இறந்த பிறகு வேதனையால் நோய்வாய்பட்டவர் 1796ல் டிசம்பர் 25ல் இறந்தார். இறக்கும் முன் மருது சகோதரர்களை தனது வாரிசாக அறிவித்து சிவகங்கையை ஒப்படைத்தார்...
No comments:
Post a Comment