Thursday, April 17, 2014
புத்திர பாக்கியம் தரும் பவுர்ணமி பங்குனி நீராடல்
குடந்தை மயிலாடுதுறை சாலையில் திருவாவடுதுறைக்கு வடகிழக்கே ஒரு கி.மீ தொலைவில் உள்ள திருவாலங்காட்டில் வட வாரண்யேசுவரர் வண்டார்குழலியுடன் அருள்புரிகிறார். தேவேந்திரன் விருத்தாசுரனைக் கொன்ற பாவம் நீங்க இத்தலத்தில் ஈசனை வழிபட்டு ஜெயந்தனைப் பெற்றார் என்றும், நான்முகன் இத் தலத்தில் தீர்த்தமாடி 10 புதல்வர்களைப் பெற்றார் என்றும் தலபுராணம் கூறுகிறது. பக்தர்கள், பங்குனி பவுர்ணமியில் இத்தல தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இங்கே இரண்டாம் பிராகாரத்தில் புத்திரகாமேசுவரரை தரிசிக்கலாம். 63 நாயன்மார்கள், தன் மனைவியுடன் யமன், சித்திரகுப்தர் ஆகியோரும் இங்கே அருள் புரிகின்றனர். பறவை நாச்சியார்- சங்கிலிநாச்சியார் சமேத சுந்தரரையும் இங்கு தரிசிக்கலாம். ஈசனின் பாதத்தைத் தன் தலைமேல் சூடிக்கொண்டவன் என்ற பட்டம் பெற்ற மூன்றாம் குலோத்துங்கனும் அழகிய சிலை வடிவாகக் காட்சியளிக்கிறான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment